Do you know how much the film has been shot in Chennai?
சென்னையில் மட்டும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் ரூ.5 கோடி வசூலித்துள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.
கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’.
இந்தப் படம் எடுத்த விதம், கதைக்களம் என அனைத்துப் பகுதியும் ரசிகளிடம் பாராட்டைப் பெற்றது.
சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. காவல்துறை சம்மந்தபட்ட படமாக இருந்தாலும் வித்தியாசமான கதை என்பதால்தான் இந்தப்படம் வெற்றிப் படமாக அமைய முடிந்தது.
இந்தப் படத்தை பார்த்துவிட்டு காவல் அதிகாரிகள் பலரும் கார்த்தியை பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. முதல் மூன்று நாட்களிலேயே இப்படம் தமிழகத்தில் நல்ல வசூல் செய்தது எனபதும் சென்னையில் மட்டும் ரூ. 5 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
