Do you know how much did Mersel Teaser release?
விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் படத்தின் டீசர் இயக்குனர் அட்லி பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும்.
தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய், அட்லி கூட்டணியில் உருவான படம் மெர்சல்.
இது, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம்.
இதில், முதன் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார் விஜய், இவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும், வடிவேலு, சத்யன், சத்யராஜ், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், எஸ்.ஜே.சூர்யா, சீனு மோகன், யோகி பாபு, மிஷா கோஷல் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஆளப்போறான் தமிழன், மெர்சல் அரசல், நீதானே பாடல்கள் போன்றவை ரசிகர்களை ஈர்த்த நிலையில், மெர்சல் டீசரும் இன்று வெளியாக உள்ளது.
உலகம் முழுவதும் வெளியாகும் மெர்சல் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
