மார்க்கெட் போன நடிகைகள் தான் சீரியல்களில் நடிப்பார்கள் என்பது எல்லாம் பழைய கதை. தற்போது சீரியல் நடிகைகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஏன் சில நடிகைகள் சின்னத்திரையில் கிடைத்த பிரபலத்தை வைத்து வெள்ளித்திரையிலும் கால் பாதித்து வெற்றிக்கொடி ஏற்றுகின்றனர்.

அப்படி விமான பணிப்பெண்ணாக இருந்து மாடலிங்கில் நுழைந்து சின்னத்திரையில் ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைந்தவர் தான் நம்ம வாணிபோஜன். ரசிகர்கள் இவரை சின்னத்திரை நயன்தாரா என அன்புடன் அழைக்கின்றனர். 

சன் டி.வி.யில் வெளியான தெய்வ மகள் சீரியலில் சத்யவாக மக்கள் மனதை கொள்ளை கொண்ட வாணி போஜன், தெலுக்கில் "மீக்கு மாத்ரமே செப்தா" என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகமாகிவிட்டார். தற்போது "ஓ மை கடவுளே" என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் அசோக் செல்வனின் சிறு வயது காதல் கிரஷ்சாக வாணி போஜன் நடித்து அசத்தியுள்ளார்.

அந்த படம் காதலர் தின விருந்தாக திரைக்கு வர உள்ள நிலையில், வாணி போஜன் அடுத்து யாருடன் நடிக்க போகிறார் என்பது தான் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பு. தற்போது புது முக இயக்குநருடன் முரளி மகன் அதர்வா கைகோர்க்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம் வாணிபோஜன். இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.