do not credit this victory to the government
சின்னத்திரையில் அறிமுகமாகி ’மேயாத மான்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் கதாநாயகியாக இடம் பிடித்திருக்கிறார் ”பிரியா பவானி சங்கர்”. இவர் குறிப்பிட்ட கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேடி நடித்து வரும் ஒரு நடிகை.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடிய போராட்டத்துக்கு, தற்போது கிடைத்திருக்கும் வெற்றி தான் ”ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைக்க, தமிழக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு”. இப்படி ஒரு நல்ல முடிவை அரசு எடுக்க 13 அப்பாவி மக்கள் தங்கள் உயிரையே கொடுத்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் பற்றி சமீபத்தில் பேசிய நடிகை ’பிரியா பவானி சங்கர்’ அரசு தான் இதற்கெல்லாம் காரணம்-னு தியேட்டர்ல விளம்பரம் போட்டுடாதீங்க என கூறியிருக்கிறார்.
மேலும் அவர் "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு உத்தரவிட்டதை நினைத்து சந்தோஷம்.இதையே சாக்கா வெச்சு சினிமா தியேட்டரில் இடைவேளையின் போது ”மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது” அப்படினு விளம்பரம் போட்டுடாதீங்க.
ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்காக மக்கள் போராடி பெற்ற வெற்றியை, தமிழக அரசு தான் போராடி வென்று எடுத்ததுனு, திரையரங்குகளில் ஒரு குறும்படம் போட்டீங்களே அதுவே போதும்.
நேர்மையாக, உயிரைக்கொடுத்து போராடிய மக்களுக்கு கிடைச்ச வெற்றியாகவே, இந்த ஸ்டெர்லைட் விஷயம் இருக்கட்டும்," என பிரியா பவானி ஷங்கர் கூறியிருக்கிறார். இந்த கருத்தை மக்களும் வரவேற்றிருக்கின்றனர்.
