Do not act on caste religion and politics - Vikram fans forum warners

சாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்து செயல்படக் கூடாது என்று விக்ரம் ரசிகர்களுக்கு, விக்ரம் ரசிகர் மன்ற நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.


அகில இந்திய சீயான் விக்ரம் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சூர்யநாராயணன், கலை அழகன், ஆகியோர் இணைந்து சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், சீயான் விக்ரம் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்றங்கள் எந்தவித சாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்து செயல்படக் கூடாது.

மதம், சாதி மற்றும் அரசியல் சம்மந்தம் இல்லாமல் அண்ணன் சீயான் விக்ரம் அவர்களின் ரசிகர்கள் என்ற எண்ணத்தில் மட்டும் ரசிகர்கள் செயல்பட வேண்டும்.

இதற்கு மாறாக மதம், சாதி, மற்றும் அரசியல் சம்மந்தப்படுத்தியும், அதன் தலைவர்களை சம்மந்தப்படுத்தியும் ரசிகர்கள் என்ற பெயரில் வெளியிடப்படும் செய்திகள் நமது மன்றத்திற்கும் எந்தவித சம்மந்தம் இல்லை என்பதை மிகவும் கண்டிப்புடன் தெரிவித்து கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.