Do i enter into politics? Rajini asked to Amitabh ...

அரசியல் குதிப்பது பற்றி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் ஆலோசனை செய்து செய்துள்ளார் நடிகர் ரஜினி,

நடிகர் ரஜினி அரசியலில் ஈடுபடுவது பற்றி பலரின் ஆலோசனையை கேட்டு வருகிறார். தற்போது அவர் காலா படப்பிடிப்பு முடிந்து சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

‘காலா’ படப்பிடிப்பிற்காக மும்பையில் அவர் சில நாள்கள் இருந்தார். அப்போது, அவரின் நீண்ட கால நண்பரும், பாலிவுட் நடிகருமான அமிதாப்பச்சனை அவர் சந்தித்துப் பேசினார்.

1984-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த அமிதாப், பாராளுமன்ற தேர்தலில் அலகாபாத் தொகுதியில் போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். ஆனால், போபர்ஸ் ஊழல் வழக்கில் அவரின் பெயர் அடிபட்டதால், அரசியலில் இருந்து விலகி, மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தினார்.

இந்நிலையில் ரஜினிகாந்த அவரிடம் அரசியலில் இறங்குவது பற்றி ஆலோசனை செய்துள்ளார். அவருக்கு பல ஆலோசனைகளையும் அமிதாப் பச்சன் வழங்கியுள்ளார்.