பரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்து பாராட்டிய திமுக தலைவர் !!
இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில், மாரிசெல்வராஜ் இயக்கி வெற்றி பெற்றுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் பார்த்து ரசித்தார். தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜையும். தாயரிப்பாளர் பா.ரஞ்சித்தையும் வெகுவாக பாராட்டினார்.
இயக்குநர் பா.ராஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படமான பரியேறும் பெருமாள் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தத் திரைப்படத்தை நடிகர் கமலஹாசன், சீமான், அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் பார்த்து பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.
இதே போல் ரசிகர்கள் மத்தியிலும் பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் பார்த்தனர்.
அவர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின் தயாரிப்பாளர் ராஞ்சித்தையும், இயக்குநர் மாரி செல்வராஜையும் பாராட்டினார்.