வாரிசு நடிகராக அறிமுகமாகி, சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து, கோலிவுட் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளவர் நடிகர் அதர்வா முரளி. இதுவரை எந்த ஒரு கிசு கிசுவில் கூட சிக்காமல், இருந்து வரும் இவர் மீது, திரைப்பட விநியோகஸ்தர் மதியழகன் என்பவர் பண மோசடி புகார் கொடுத்துள்ள விஷயம் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விநியோகஸ்தர் மதியழகன் கொடுத்த புகாரில் அதர்வா நடித்த ‘செம போத ஆகாதே’ படத்திற்காக தனது நிறுவனம் அவுட்ரைட் முறையில் ஒப்பந்தம் செய்து கொண்டு ரு.5.5 கோடி கொடுத்ததாகவும், இந்த ஒப்பந்தத்தின்படி அதர்வா நடந்து கொள்ளாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து கொடுக்காமல் காலதாமதம் செய்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
இதனால் இந்த ஒப்பந்தம் விநியோகிஸ்தர் ஒப்பந்தமாக மாறிவிட்டதாகவும், அதன் படி தனக்கு ரூ.5.5 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து அதர்வா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 12, 2019, 5:59 PM IST