Asianet News TamilAsianet News Tamil

’சர்கார்’டிக்கட் ரூ. 5,000... நடிகர்களின் பேராசையே காரணம்...விஜய்க்கு எதிராக வெடிகுண்டு வீசும் விநியோகஸ்தர்

’30 கோடியிலிருந்து 40கோடிக்கு அதிலிருந்து 50 கோடிக்கு சம்பளம் ஏறவேண்டும் என்ற நடிகர்களின் பேராசைதான் சினிமா டிக்கட் ஆயிரத்திற்கும் ரெண்டாயிரத்துக்கும் விற்கக் காரணம்’ என்கிறார் முன்னணி விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் விஜயை நோக்கி வெடிகுண்டு வீசியிருக்கிறார்.

distributer speaks against sarkar
Author
Chennai, First Published Nov 5, 2018, 3:48 PM IST

’30 கோடியிலிருந்து 40கோடிக்கு அதிலிருந்து 50 கோடிக்கு சம்பளம் ஏறவேண்டும் என்ற நடிகர்களின் பேராசைதான் சினிமா டிக்கட் ஆயிரத்திற்கும் ரெண்டாயிரத்துக்கும் விற்கக் காரணம்’ என்கிறார் முன்னணி விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் விஜயை நோக்கி வெடிகுண்டு வீசியிருக்கிறார்.distributer speaks against sarkar

விஜயின் ‘சர்கார்’ பட டிக்கட்டுகள் முதல் இரு தினங்களுக்கு சென்னையில் ரூ இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் வரையிலும், மற்ற முக்கிய நகரங்களில் ஐநூறு முதல் ஆயிரம் வரையிலும் விற்கப்படுகின்றன. அரசு உத்தரவுகளை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக விஜய் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களையும் கடுமையாக சாடி இருக்கிறார் முன்னணி விநியோகஸ்தரும் திரையரங்க உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியன். 

‘என்னைப்பொறுத்தவரையில் நான் சரியான விலைக்குத்தான் விற்கிறேன். மற்ற தியேட்டர்காரர்கள் விற்பதற்குக் காரணம் சாட்சாத் நடிகர்களும் தயாரிப்பாளர்களும்தான். டிக்கட்டை அதிக விலைக்கு விற்கக்கூடாதென சம்பந்தப்பட்ட நடிகர்களோ படக்குழுவினரோ சொன்னால் மட்டும் தான் சரியாக வரும். அவர்கள் இது தொடர்பாக வாயைத் திறப்பதில்லை. அதிக விலை விற்றால் மட்டுமே சம்பளம் அதிகமாகக் கிடைக்கும். டிக்கெட் அதிக விலைக்கு விற்க விற்க சம்பளம் 30 கோடி ரூபாய், 40 கோடி ரூபாய், 50 கோடி ரூபாய் என போய்க்கொண்டே இருக்கும்.

எங்களைப் பொறுத்தவரை நாட்டில் இருக்கும் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியாது. நாங்கள் எல்லாம் சாதாரணமானவர்கள். என் திரையரங்குகளில் ரூ.150-க்கு மேல் ஒரு டிக்கெட் கூட விற்கவில்லை. அனைத்துமே ஆன்லைனில் தான் விற்கிறோம். இது தொடர்பாக பேசிப்பேசி டயர்டாகிவிட்டேன்.distributer speaks against sarkar

பெரிய விலை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்குகிறார்கள். அவர்களைக் குறை சொல்ல முடியாது. இதில் திருந்த வேண்டியவர்கள் நடிகர்கள் தான். அவர்கள் தான் எங்களுக்கு கணிசமான சம்பளம் போதும். நியாயமான விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யுங்கள் என்று அறிக்கை கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே டிக்கெட் பிரச்சினை முடிவுக்கு வரும்.

திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் 10 பேரும் இப்படிச் செய்ய வேண்டும். அவர்களோ இந்த விஷயத்தில் வாயைத் திறப்பதே இல்லை'' என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

Follow Us:
Download App:
  • android
  • ios