Asianet News TamilAsianet News Tamil

The Legend OTT: 'தி லெஜெண்ட்' படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

பிரபல தொழிலதிபர் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்த, 'தி லெஜன்ட்' திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில்.... அந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரபல முன்னணி நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

Disney hot star bagged by the legend movie digital rights
Author
First Published Nov 26, 2022, 5:47 PM IST

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றி வந்த லெஜெண்ட் சரவணன், பின்னர் நடிகராக அவதாரம் எடுத்தார். அந்த வகையில் இவர் தன்னுடைய விளம்பரங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி, ஜெர்ரி, இயக்கத்தில் நடித்த திரைப்படம் 'தி லெஜன்ட்' ஆக்கப்பூர்வமான கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் லெஜெண்ட் சரவணன் விஞ்ஞானியாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலே நடித்திருந்தார்.

Disney hot star bagged by the legend movie digital rights

டிஸ்சார்ஜ் ஆன கையேடு 'DSP' படவிழாவில் கலந்து கொண்ட கமல்..! உலக நாயகன் முன் மண்டியிட்ட விஜய் சேதுபதி!

மேலும் ரோபோ சங்கர், தேவதர்ஷினி, போன்ற பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக நடிகர் விவேக் கடைசியாக நடித்த திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வசூல் ரீதியாக இப்படம் வெற்றிபெற வில்லை என்றாலும்,  விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தை தி லெஜெண்ட் சரவணன் தயாரித்து நடித்த நிலையில், இந்த படத்தின் ஓடிடி  உரிமையை அவர் எந்த நிறுவனத்திற்கும் நிறுவனத்திற்கும் விற்பனை செய்ய முன்வரவில்லை என கூறப்பட்டது.

Disney hot star bagged by the legend movie digital rights

இவங்கள என்ன செய்யலாம்? மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்த கமலின் மார்க்கமான பேச்சு.! காத்திருக்கும் சம்பவம்! ப்ரோமோ...

அனால் இவருடைய ரசிகர்கள் தொடர்ந்து, 'தி லெஜெண்ட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், பிரபல ஓடிடி நிறுவனம் இந்த படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, 'டிஸ்னி ஹாட் ஸ்டார்' நிறுவனம் 'தி லெஜெண்ட்' படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ளது.  எனவே விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி  குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Disney hot star bagged by the legend movie digital rights

பாக்கிய லட்சுமி சீரியலுக்கு இந்த நிலையா? TRP ரேட்டிங்கில் அடித்து தும்சம் செய்த சன் டிவி தொடர்கள்..!

மேலும் தி லெஜெண்ட் சரவணன் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட பிரபல இயக்குனர் சுந்தர் சி சரவணன் அருளை சந்தித்ததால், அவர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படும் நிலையில், விரைவில் அடுத்தபடம் குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow Us:
Download App:
  • android
  • ios