அஜீத் நடித்துள்ள விவேகம் படத்தின் “காதலாட” என்னும் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவாவுடன் மூன்றாவது முறையாக இணைந்து அஜித் நடிக்கும் படம் விவேகம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவருடன், கமலின் இளைய மகள் அக்ஷராஹாசனும் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் சர்வைவா வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர், தலை விடுதலை என்று தொடங்கும் இரண்டாவது பாடலும் வெளியானது.

இந்த நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான “காதலாட” நேற்று வெளியானது. அஜித்திற்கு, கபிலன் எழுதிய முதல் பாடலான இதில் வரிகளை ரசித்து எழுதியிருக்கிறார். அஜித் ரசிகர்கள் என்று பார்த்தாலும் சரி, அல்லது கவிதையை ரசிப்பவர்கள் என்று பார்த்தாலும் சரி இந்தப் பாடல் அவர்களின் பிளே லிஸ்டில் நிச்சயம் இடம்பெறும்.