அஜித்தின் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள விவேகம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டார் இயக்குனா் சிவா.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகா்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலா் நடித்துள்ள படம் விவேகம்.

பெரும்பான்மையான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் 10-ஆம் தேதி திரைக்கு வரும் என்று அனைவராலும் எதிா்பாா்க்கப்பட்டது. வேதாளம் படம் திரைக்கு வந்து சற்று காலம் ஆகிவிட்ட நிலையில் அஜித்தின் ரசிகா்கள் அவரது அடுத்த படமான விவேகம் படத்தை மிகவும் ஆவலுடன் எதிா் நோக்கி இருந்தனா்.

இந்த நிலையில் இயக்குனா் சிவா தனது டிவிட்டா் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “வருகிற 24-ஆம் தேதி (வியாழக்கிழமை) விவேகம் திரைப்படம் திரைக்கு வரும்” என்று தொிவித்துள்ளாா்.

ரசிகா்களின் தேவையை அறிந்து அவ்வபோது அஜித்தின் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகா்களின் ஆசையை மேலும் தூண்டியது.

இந்த நிலையில் இயக்குனா் சிவா வெளியிட்டுள்ள டிவிட்டா் பதிவு ரசிகா்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.