இயக்குனர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் வடபழனி கமலா திரையரங்கில் ஜூன் 10 ஆம் நடைபெற்றது.  விக்ரமன் மற்றும்  செல்வமணி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், இயக்குனர் இமையம் பாரதிராஜாவை தலைவராக தேர்வு செய்ய அனைவரும் ஒரு மனதாக சம்மதம் தெரிவித்தனர் . இதன் தொடர்ச்சியாக , ஜூலை மாதத்தில் பாரதிராஜா இயக்குனர் சங்க தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

இதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் சங்க தேர்தல் ஜூலை 14 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  2 துணைத் தலைவர்கள், 1 பொதுச் செயலாளர், 1 பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மேலும்  4 இணைச்செயலாளர் 12 செயற்குழு உறுப்பினர்கள்  பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.