Director Vikraman will contest again

இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் இயக்குனர் விக்ரமன் போட்டியிடுகிறார்.

இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தமிழ் இயக்குனர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து இயக்குனர்கள் சங்கத் தேர்தல் வரும் 30-ஆம் தேதி நடத்தப்படுகிறது.

சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த தேர்தலுக்கு மாவட்ட முன்னாள் நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் அதிகாரியாக நியமிக்கபட்டுள்ளார்.

இதில், இயக்குனர் விக்ரமன் தலைமையில் புது வசந்தம் அணி, புதிய அலைகள் அணி என்று இரு அணிகள் போட்டியிருகிறது. இதில் புது வசந்தம் அணியில் தலைவர், செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விக்ரமன், ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக புதிய அலைகள் அணியில் வேட்பாளர்கள் யாரும் இல்லை. சுயேட்சையாக இயக்குனர் ஈ.ராமதாஸ் போட்டியிடுகிறார்.

இயக்குனர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் புது வசந்தம் அணி:

தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் பேரரசு, துணைத் தலைவர்கள் கே.எஸ். ரவிக்குமார், ஆர்வி உதயக்குமார், இணைச் செயலாளர்கள் ரமேஷ் கண்ணா, மனோஜ்குமார், ஏ.வெங்கடேஷ், அறிவழகன் என்ற சோழன்.

புதிய அலைகள் அணி:

பொருளாளர் ஆ.ஜெகதீசன், துணைத் தலைவர், வி.சுப்பிரமணியம் சிவா, இணைச் செயலாளர்கள் ஜி.ஐந்துகோவிலான், நாகராஜன், மணிகண்டன் பி.பாலமுரளிவர்மன் மற்றும் ஆ.ராமகிருஷ்ணன் ஆகிய 5 பேர் போட்டியிடுகின்றனர்.