Director Vijay was watching me as long as she was shooting - Jayam Ravi

ஜெயம் ரவி இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘வனமகன்’.

இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

திங் பிக் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்தப்படம் வரும் 23-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், ஜெயம் ரவி இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இயக்குனர் விஜய் தன்னை படப்பிடிப்பு முடியும் வரை குழந்தை போல பார்த்துக் கொண்டதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அதிகமாக செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் வசூல் வேட்டை நடத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார் ரவி.

ஒருவேளை படம் எதிர்பார்த்த அளவு வெற்றிப் பெறாமல் போனால் இயக்குனர் விஜய்க்கு மற்றொரு படத்தை சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று உறுதி அளித்தார்.