தன் முதல் படத்தையே அஜித்தை வைத்து எடுத்து மெகா ஹிட் கொடுத்தவர் இயக்குனர் விஜய். பின் கிரீடம், தலைவா என தல, தளபதி என இருவரையும் வைத்து படமெடுத்து விட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

 இவர் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, மற்றும் சோனு சூட் நடித்து சமீபத்தில் வெளிவந்தது தேவி படம்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, கிட்டத்தட்ட இரண்டு நாட்களில் ரூ 3 கோடி வரை படம் வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் இப்படதை மூன்று மொழிகளில் இயக்கியுள்ளார் இயக்குனர் விஜய் , இப்படத்தை எடுத்து முடிப்பதற்குள் விஜய்க்கு போதும்... போதும் என்றாகிவிட்டதாம்.

ஏனெனில் பிரபுதேவா மூன்று மொழிகளிலும் நன்றாக பேசிவிட்டாராம், மற்ற நடிகர், நடிகைகளை வேலை வாங்குவது மிகவும் கஷ்டமாக இருந்ததாம்.

தற்போது படத்தின் பாசிட்டிவ் ரிசல்ட் விஜய்யை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது, தமிழில் இன்று இப்படத்திற்கு நிறைய காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.