சமீபத்தில் டெல்டா பகுதிகளில் ஒரேயடியாக தன்னுடைய கோர தாண்டவத்தால் கஜா புயல் சூறையாடியது. இதனால் புதுக்கோட்டை, நாகை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

ஒருபக்கம் படு வேகமாக நிவாரண பணிகள் நடைபெற்று வந்தாலும் உள்புற கிராம பகுதிகளுக்கு போதுமான நிவாரணம் சென்று சேரவில்லை என்றும் பலர் உன்ன உணவு கூட இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் டெல்டா பகுதி மக்களுக்காக தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் டெல்டா பகுதி மக்கள் தற்போது தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்து தவித்து வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அவர்கள் விவசாயத்திற்காக பெற்ற வங்கி கடனை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைக்கு வழியில்லாமல் இருக்கும் டெல்டா விவசாயிகள், வங்கிக்கடனை திரும்ப கட்டுவது என்பது சாத்தியமற்றது என்று ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இயக்குனர் வெற்றி மாரணம் இதே போல் கூறி உள்ளதால் இவருடைய கருத்துக்கு பலர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.