சினிமாவை அரசியல்மயமாக்குவது முக்கியம்... திருமாவளவன் மணிவிழாவில் வெற்றிமாறன் பேச்சு!

எதார்த்தமான கதைகளையும், நாவல்களையும் தன்னுடைய பாணியில் எடுத்து வெற்றிப்பட இயக்குனராக தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்படும், வெற்றிமாறன், தமிழ் சினிமா அரசியல் மயமாக்கப்படவேண்டும் என கூறியுள்ள கருத்து, வைரலாகி வருகிறது.
 

Director vetrimaaran about Tamil cinema should be politicized

அதிக போட்டிகள் நிறைந்த திரைத்துறையில், தனித்துவமான இயக்குனர்களாக அறியப்படுபவர் ஒரு சிலரே... அந்த வகையில், தனுஷ் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான 'பொல்லாதவன்' திரைப்படம் மூலம் வெற்றிப்பட இயக்குனராக அறியப்பட்டவர் வெற்றிமாறன். இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான 'ஆடுகளம்' திரைப்படம் இவருக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும், சிறந்த ஸ்கிரீன் பிளேவுக்கான விருதையும் பெற்று தந்தது.

Director vetrimaaran about Tamil cinema should be politicized

இவர் இயக்கத்தில் வெளியான, விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற படங்களும் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது. விரைவில், வெற்றிமாறன் சூரியை ஹீரோவாக வைத்து இயக்கி உள்ள 'விடுதலை' திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. அதே போல்... சூர்யாவை வைத்து வாடி வாசல் என்கிற படம் ஒன்றையும் இயக்க உள்ளார். சினிமாவில் மிகவும் பரபரப்பாக இயக்கி கொண்டிருக்கும் வெற்றிமாறன் தான் கலந்து கொண்ட விழாவில், சினிமாவில் அரசியலை பற்றி பேசும் படங்கள் வரவேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: பல உதவிகள் செய்த எனக்கே இந்த நிலைமை..? நீக்க பட்ட பின்னர்... நடிகர் சங்கத்தை பற்றி புட்டு புட்டு வைத்த உதயா!
 

Director vetrimaaran about Tamil cinema should be politicized

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சி சென்னையில் நடந்த பொது, அதில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன் தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததன் விளைவாகத்தான், தமிழ்நாடு இன்னும் ஒரு மதசார்பற்ற மாநிலமாகவும் பல வெளிப்புற சக்திகளை எதிர்க்கும் பக்குவத்துடனும் இருந்து வருகிறது. சினிமா வெகு மக்களை மிக எளிதாக சென்றடைய கூடிய ஒரு கலை வடிவமாக உள்ளது. எனவே சினிமாவை அரசியல் மயமாக்குவது மிகவும் முக்கியம் என பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்: வந்தியத்தேவன் அப்படிப்பட்ட ஆள் கிடையாது... தவறாக சித்தரித்துள்ளதாக பரபரப்பு புகார் - சிக்கலில் மணிரத்னம்
 

இயக்குனர் வெற்றிமாறனின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் பலர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். எனவே இவருடைய இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios