பிரபல இயக்குனர் டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசனின் மனைவி, முதல் முறையாக கேசுவல் உடையில் வெளியில் சென்ற போது, குடும்பத்துடன் எடுத்து கொண்டு புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில், முன்னணி இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்பட்டவர் டி.ராஜேந்தர். அண்ணன் - தங்கை, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கும் மிக சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர். தற்போது இவர், அவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

குறளரசன் திருமணம்:

டி.ராஜேந்தரின் மூத்த மகன் சிம்புவிற்கு, இன்னும் திருமணம் ஆகாத நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது மகன் குறளரசனுக்கும், அவருடைய காதலி நபீலா என்கிற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. மிகவும் எளிமையான முறையில் முஸ்லீம் வழக்கப்படி இவர்களுடைய திருமணம் நடந்தாலும், திருமண வரவேற்பு மிகவும் பிரமாண்டமாக நடந்தது.

கலை கட்டிய வரவேற்பு:

இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு, அவர்களை வாழ்த்தினர். இவர்களுடைய திருமணத்தில், ரஜினி, கமல், சூர்யா, விஜய் உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மட்டும் இன்றி, பல அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

சிம்பு திருமணம்:

டி.ராஜேந்தரின் இளையமகன் குறளரசனுக்கு திருமணம் நடந்து விட்டதால், மூத்த மகன் சிம்புவின் திருமணம் ஏப்போது என்கிற கேள்வி பரவலாக எழுத போது, விரைவில் நடைபெறும் என்பதை, மன வருத்தத்தோடு தெரிவித்தார் டி.ஆர்.

பிஸியான சிம்பு:

தன்னுடைய சகோதரர், திருமணத்திற்கு முன் உடல் எடை குறைப்பு சிகிச்சை மேற்கொள்ள, லண்டன் சென்று திரும்பினார். தற்போது உடல் எடையை குறைத்து பிட்டாக மாறியுள்ளார். அவர் எதிர் பார்த்ததுபோல் தற்போது பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. எனவே சிம்பு அடுக்கடுக்காக படங்கள் நடிப்பதால் செம பிஸி.

பேமிலி புகைப்படம்:

இந்நிலையில் குடும்பத்துடன் வெளியில் சென்ற போது, எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருமணத்திற்கு பின் முதல் முறையாக டி.ராஜேந்தரின் மருமகள் மிகவும் கேசுவல் உடையில், இருக்கிறார். இவர் இவ்வளவு அழகா என பார்க்கும் ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.