director suseendran about kadugu movie

'கோலி சோடா', படத்திற்கு பின் விஜய் மில்டன் இயக்கிய '10 எண்றதுக்குள்ள' படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர், ஆனால் இந்த படம் தோல்வியடைந்தது.

இதையடுத்து தற்போது அவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும், 'கடுகு' இன்று வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுவருகிறது.

குறிப்பாக திரையுலகினர் இந்த படத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குனர் சுசீந்திரன், 'கடுகு' படத்தை இயக்கிய விஜய் மில்டனுக்கு இந்த படம் குறித்து உணர்வுபூர்வமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் 'கடுகு', Engaging Entertainer Movie.. மில்டன் சார் அவர்களின் வசனங்கள் பல இடங்களில் என்னை கைதட்ட வைத்தது...

அனைத்து கதாபாத்திரங்களும் நேர்த்தியான தேர்வு. ராஜகுமாரன், பரத் இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சரியாக நடித்துள்ளனர். ராஜகுமாரன் அவர்களை கதாநாயகனாக வைத்து இப்படியொரு திரைப்படத்தை துணிச்சலுடன் இயக்கிய மில்டன் அவர்களை எவ்வளவு வேண்டுமென்றாலும் பாராட்டலாம். அவருடைய நம்பிக்கையும் கடின உழைப்பும் அவருக்கு பெரிய வெற்றியை தேடிதரும்

இப்படத்தை வெளியிடும் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இவ்வாறு இயக்குனர் சுசீந்திரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.