துவக்கத்தில் தரமான இயக்குநர் என்று பேரெடுத்த இயக்குநர் சுசீந்திரன் சமீபகாலமாக துட்டு மட்டுமே சம்பாதிக்கும் குறுகிய நோக்கத்தில் ஏகப்பட்ட கெட்டபெயரைச் சம்பாதித்து வருகிறார்.

நடிகர் விக்ரமை வைத்து ’ராஜபாட்டை’ இயக்கிய சமயத்திலிருந்தே டிராக் மாறத்துவங்கிய சுசீந்திரன் அதன்பின்னர் ஒரு தயாரிப்பாளரின் வாரிசை ஹீரோவாக்கி’ ஆதலால் காதல் செய்வீர்’ என்ற படத்தில் பெரும் துட்டு சம்பாதித்தார். அடுத்து அவரது இயக்கத்தில் சமீபத்தில் வந்த ‘ஜீனியஸ்’ பட ஹீரோவும் ஒரு ஃபைனான்சியரே.

இந்நிலையில் அதே ஃபைனான்சியர்  ரோஹன் ஹீரோவாக நடிக்க ‘சாம்பியன்’ என்றொரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.ஃபுட் பால் மேட்ச் பின்னணியில் நடக்கிற கதை.அதற்காக, ஒலிம்பிக்கில் விளையாட ஆள் செலக்ட் பண்ற மாதிரி பல்வேறு வழிகளில் தேடி உண்மையாகவே ஃபுட்பால் மேட்சில் கில்லியாக இருக்கக்கூடிய பையன்களாகத் தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறார். 

படமும் முடிந்து காப்பி ரெடி!இதுவரைக்கும் எல்லாமே ஓக்கே! படம் எடுக்கிறவரை எதிலும் குறுக்கே நின்றதில்லை தயாரிப்பாளர் கே.ராகவி.இவர் தயாரிப்பாளர்,நடிகர் ஆர்.கே.சுரேஷின் உடன்பிறந்த சகோதரி.கடைசியாக படம் பார்க்க மட்டும் வந்திருக்கிறார்.

சுசீந்திரன் கதை சொல்லும் போது இருந்த வேகம் படத்தில் இல்லை! ஆனாலும்,அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் ,மேற்கொண்டு பணம் செலவு பண்ணி, சில காட்சிகளை ரீ ஷூட்  பண்ணலாம் என்றிருக்கிறார் தயாரிப்பாளர்.’ஓகே மேடம்,பண்ணிக்கலாம்’ என்று சொன்ன  சுசீந்திரன் ‘நான் எவ்வளவு பெரிய டைரக்டர். எனக்கே ஐடியாவா என்றபடி தொடர்பு எல்லைக்கு வெகு அப்பால் அப்பீட் ஆகிவிட்டார்.

அவரை நேரில் சந்திக்கச் சென்றாலும் உதவி இயக்குநர்கள் ‘சார் வெளிய போயிருக்காரு.பிசியா இருக்காரு’ என்று சொல்லியே விரட்டி அடிக்கிறார்களாம். இதனால் நொந்துபோன ராகவி தயாரிப்பாளர் சங்கக் கதவுக்கு தன் பங்குக்கு ஒரு பூட்டைப் போட்டு கவனத்தை ஈர்க்கலாமா என்று யோசித்து வருகிறாராம்.