Asianet News TamilAsianet News Tamil

’நான் நடிகர் அவதாரம் எடுத்தை வீட்டில் யாருமே விரும்பவில்லை’...’சுட்டுப்பிடிக்க உத்தரவு’ சுசீந்திரன்...

தமிழ் சினிமாவின் பெரும்பாலான இயக்குநர்கள் நடிகர்களாகவும் மாறிவரும் நிலையில் லேட்டஸ்ட் வரவான சுசீந்திரன்,’நான் நடிகராக கமிட் ஆனதை என் மனைவி உட்பட வீட்டில் யாருமே விரும்பவில்லை’என்று தெரிவித்துள்ளார்.

director suseendiran interview
Author
Chennai, First Published Jun 20, 2019, 11:22 AM IST

தமிழ் சினிமாவின் பெரும்பாலான இயக்குநர்கள் நடிகர்களாகவும் மாறிவரும் நிலையில் லேட்டஸ்ட் வரவான சுசீந்திரன்,’நான் நடிகராக கமிட் ஆனதை என் மனைவி உட்பட வீட்டில் யாருமே விரும்பவில்லை’என்று தெரிவித்துள்ளார்.director suseendiran interview

சமுத்திரக்கனி,கரு.பழனியப்பன், மிஸ்கின் உட்பட பல இயக்குநர்கள் படங்களில் ஹீரோ அல்லது முக்கிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள். இவர்களுடன் ‘சுட்டிப்பிடிக்க உத்தரவு’படத்தின் மூலம் நடிப்புக்கு ஷிஃப்ட் ஆகியிருக்கிறார் ‘வெண்ணிலா கபடிக்குழு’படம் உட்பட பத்துப்படங்கள் வரை இயக்கியுள்ள சுசீந்திரன்.

தனது நடிப்பு எண்ட்ரி குறித்துப் பேட்டி அளித்த சுசீந்திரன், இதர்கு முன்பே சில நடிப்பு வாய்ப்பு வந்தபோது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தார்கள் ஆனால் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’படத்தில் என் கதாபாத்திரத்தை கூறியதும்  அது வழக்கமான  ஒரு பாத்திரமாக இல்லாததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்தப் படத்தில்  எனக்கு ஓடுவது மட்டுமே சவாலாக இருந்தது. முதல் பாதி படம் பார்த்த என் குடும்பத்தார்கள் நடிப்பதில் நான் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டேனோ என்று நினைத்தார்கள். இடைவேளையில் ‘நாங்க சொன்னதைக்கேட்டிருக்கலாமில்ல என்ற கமெண்டும் கூட வந்தது.ஆனால், இரண்டாவது பாதி பார்த்துவிட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.director suseendiran interview

ஒரு இயக்குநராக நான் இதுவரை பெரிதாக சாதிக்கவில்லை என்பது தெரியும். இன்னும் உச்சம் தொட வேண்டும். அதன்பின் தான் நடிப்பில் கவனம் செலுத்துவேன்.  நடுவில் இதுபோல்  ஒன்றிரண்டு வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஆனால் நல்ல சம்பளம் தருகிறார்கள் என்பதற்காக கன்வின்ஸ் ஆகாத கேரக்டர்களில் கண்டிப்பாக நடிக்கமாட்டேன்’ என்று சொல்லும் சுசீந்திரன் கைவசம் ‘கென்னடி கிளப்,’சாம்பியன்’,’ஏஞ்சலினா’ஆகிய மூன்று படங்கள் இருக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios