Asianet News TamilAsianet News Tamil

கொரோனா நிவாரண பணிக்காக புதிய முயற்சியில் இறங்கிய இயக்குனர் சுசீந்திரன்..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, நடிப்பு பயிற்சி ஒன்றில் மூலம் நிதி திரட்டி அதனை கொரோனா நிவாரண பணிகளுக்காக அளிக்க உள்ளதாக பிரபல இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.
 
director suseendhar taken online acting class for corona fund
Author
Chennai, First Published Jun 6, 2021, 4:18 PM IST

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, நடிப்பு பயிற்சி ஒன்றில் மூலம் நிதி திரட்டி அதனை கொரோனா நிவாரண பணிகளுக்காக அளிக்க உள்ளதாக பிரபல இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.

தமிழகத்தை கொரோனா இல்லாதா மாநிலமாக  மாற்ற மாநில அரசும், சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கு பிறப்பிக்க பட்டத்தின் பலனாக ஒவ்வொரு நாளும் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்க பட்டு வந்த நிலையில், தற்போது 22 ஆயிரமாக குறைந்துள்ளது. எனவே தற்போது அத்யாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு மட்டும் அனுமதி கொடுத்துள்ள தமிழக அரசு, ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்துள்ளது.

director suseendhar taken online acting class for corona fund

மேலும் முதல்வர் ஸ்டாலின், கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கும், மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், பெட், ஆச்சிஜன் செறிவூட்டிகள், மற்றும் தடுப்பூசி போன்றவற்றின் தேவைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதி கொடுத்து உதவ வேண்டும் என்கிற அறிக்கை வெளியிட்ட பின், அடுத்தடுத்து பலர் தங்களால் முடிந்த உதவிகளை ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவும், நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தும் காலாசாலைகளை வழங்கி வந்தனர்.

director suseendhar taken online acting class for corona fund

நடிகர் சூர்யா, ஜெயம் ரவி, அஜித், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட பலர் தங்களால் முடிந்த தொகையை கொரோனா நிவாரண பணிக்காக வழங்கிய நிலையில், தற்போது வெண்ணிலா கபடிக்குழு, பாண்டிய நாடு போன்ற பல படங்களை இயக்கியுள்ள இயக்குனர் சுசீந்திரன், நடிப்பு பயிற்சி ஒன்றை துவங்கியுள்ளார். மொத்தம் 10 செஷன் எடுக்கப்படும் இந்த வகுப்பில், ஒரு நாளைக்கு ரூ.100 வீதம் வசூலிக்கப்பட்ட உள்ளது. இதன் மூலம் வரும் மொத்த பணத்தையும் அவர் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

director suseendhar taken online acting class for corona fund

இயக்குனர் சுசீந்தரரின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு பலருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகின் மீது ஆர்வம் கொண்ட பல இளஞர்கள் உள்ளனர், அவர்களுக்கு நேரடியாகவே இயக்குனர் ஒருவரிடம் இருந்து நடிப்பு பயிற்சி ஆன்லைன் மூலம் கிடைக்கிறது என்றால் பலர் கலந்து கொண்டு பயன்பெற வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.
 
Follow Us:
Download App:
  • android
  • ios