”நடிகை நயன் தாராவை ராதாரவி கொச்சையாகப் பேசிய விவகாரத்தில் அவரை மட்டும் குறை சொல்ல முடியாது. தங்களுக்கு அசிங்கம் நேர்கிறபோது கூக்குரல் எழுப்புகிற விக்னேஷ் சிவனும், நயன் தாராவும் யோக்கியமான சினிமா எடுத்தவர்களா?” என்று புதுப் பஞ்சாயத்து ஒன்றைத் துவக்கியிருக்கிறார் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ பட இயக்குநர் தோழர் லெனின் பாரதி.

தனது முதல் படத்திலேயே இப்படியெல்லாம் ஒரு படம் எடுக்க முடியுமா என்று ஒட்டுமொத்த சினிமா இயக்குநர்களை ஏங்கவைத்தவர் இயக்குநர் லெனின் பாரதி. வசூலிலும் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்த அப்படத்துக்குப் பின் தனது இரண்டாவது படத்தை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் ஒரு திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் தமிழில் ஆபாசப்படங்கள் அதிகரித்து வருவது குறித்துப் பேசினார்.

அப்போது,” நயன்தாரா விவகாரத்தில் நடிகர் ராதாரவி பேசியது உறுதியாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நயனுக்கு வக்காலத்து வாங்கும் விக்னேஷ் மட்டும் யோக்கியரா? இதே நயன் தாராவை வைத்து அவர் இயக்கிய ‘நானும் ரவுடிதான் படத்தில் ‘நான் உங்களைப் போடணும் சார்’ என்று வில்லன் பார்த்திபனிடம் பேசவைத்து கைதட்டல் வாங்கிக் காசு சம்பாதித்தவர்கள்தானே அந்த இருவரும்.

இன்று ராதாரவி கொச்சையாகப் பேசுவது தங்களை நேரடியாகப் பாதிக்கிறது எனும்போது அதைப் பேசிய ராதாரவி மீது மட்டுமல்லாது. அங்கிருந்த பார்வையாளர்கள் கைதட்டி ரசிப்பதும் இவர்களுக்கு வலிக்கிறது. இது அசிங்கம் என்பது நானும் ரவுடிதான் படம் எடுக்கிறபோது படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கும் ஆபாச வசனம் பேசிய நயன் தாராவுக்கும் தெரிந்திருக்கவேண்டும்” என்கிறார் இயக்குநர் லெனின் பாரதி.