17 வயது இளம் நடிகை ஒருவர் தொடர்ந்து ரீ-டேக் வாங்கியதால், கடுப்பான பிரபல இயக்குனர் அவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவர் மத்தியிலும் திட்டியுள்ளார். இதனால் அந்த நடிகை அழுது கொண்டே சென்றது படப்பிடிப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

17 வயது இளம் நடிகை ஒருவர் தொடர்ந்து ரீ-டேக் வாங்கியதால், கடுப்பான பிரபல இயக்குனர் அவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவர் மத்தியிலும் திட்டியுள்ளார். இதனால் அந்த நடிகை அழுது கொண்டே சென்றது படப்பிடிப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக 'சண்டக்கோழி 2 ' படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து படம் இயக்காமல் இருந்த லிங்குசாமி தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் இவருக்கு ஜோடியாக, மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'உப்பெண்ணா' பட நாயகி கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். மேலும் ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது கீர்த்தி ஷெட்டி நடித்த முக்கிய காட்சி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் கீர்த்தி பல முறை டேக் வாங்கியும் இயக்குனர் எதிர்பார்த்த நடிப்பை இவரால் வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான இயக்குனர் லிங்குசாமி அனைவர் மத்தியிலும் கீர்த்தி ஷெட்டியை திட்டியுள்ளார். இதனால் அழுதபடியே கீர்த்தி கேரவனுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் சில மணிநேரம் பரபரப்பு நிலவியுள்ளது.

சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்திற்கு அன்பறிவ் என்பவர் சண்டை பயிற்சியாளராக உள்ளார். பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.