தல அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் நாளை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகிறது. இதனால் தல ரசிகர் இந்த வருட பொங்கலை  இரட்டை பொங்கலாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

தல ரசிகர்கள் பலர், லட்சம் கணக்கில் செலவழித்து பேனர்கள் போஸ்டர்கள் விதவிதமான வண்ண மின் விளக்குகளில் அஜித் உருவத்தை வைத்து தெறிக்கவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார் என்று படக்குழுவினர் கூறி வந்தாலும்,  ஒரு சிலர் 'வீரம்' படத்தில் நடித்தது போன்று, காதாப்பாத்திரத்தை தான், அஜீத் ஏற்று நடித்துள்ளதாக கூறி வந்தனர்.

தற்போது விஸ்வாசம் படத்திற்கும், வீரம் படத்திற்கும் உள்ள ஒற்றுமை குறித்து இயக்குனர் சிவா, பிரபல ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் வீரம் படத்திற்கும் இந்த படத்திற்கும் உள்ளது ஒரே ஒரு சம்மந்தம் தான். இரண்டு படங்களிலும் அஜித் வேஷ்டி கட்டி நடித்துள்ளார். அதை தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.

இந்த திரைப்படத்தில் முற்றிலும் வேறுபட்ட அஜித்தின் கதாபாத்திரத்தை  காணமுடியும். ஆரம்பத்திலிருந்தே அஜித் விசுவாசம் படத்தில் தன்னுடைய அளப்பரையை அல்லி கொட்டுவார். இதனால் பார்த்தவர்களுக்கு ஆரம்பம் முதல் முடிவு வரை இந்த படத்தின் கதையை ரசிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் கதையில் அஜித் கதாபாத்திரத்தை எழுதும்போதே ஒரு எழுத்தாளராகவும், இயக்குனராகவும் தனக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் கண்டிப்பாக ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்றும் சிவா இதுவரை தெரிவித்திராத தகவலை தெரிவித்துள்ளார் .