அஜித் ரசிகர்கள் அனைவரும் அடுத்ததாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பது 'விஸ்வாசம்' படத்தின் டீசரை தான். 

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் கூட நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அனைவரும் இயக்குனர் சிவாவிடம் கேள்வி எழுப்பி வந்தனர். 

இந்த நிலையில் நேற்று ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சிவா, 'இன்னும் பத்து நாட்களில் 'விஸ்வாசம்' டீசரை எதிர்பார்க்கலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

மேலும் தற்போது டீசர் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் சென்சாருக்கு சென்றுவந்த பின் டீசர் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

எப்படியும் கிறிஸ்துமஸ் முடிந்த ஓரிரு நாட்களில் 'விசுவாசம்' டீசர் வெளியாகி எப்படி பாடல்கள் சாதனை படைத்ததோ அதே போல் டீசரும் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.