தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. கார்த்தி, தமன்னாவை வைத்து சிவா இயக்கிய சிறுத்தை திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதனால் அவரை ரசிகர்கள் செல்லமாக சிறுத்தை சிவா என அழைக்கின்றனர். அடுத்தடுத்து அஜித் - சிறுத்தை சிவா கூட்டணி அமைத்த வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என ‘வி’ வரிசை படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக தவிர்க்க முடியாத இயக்குநராக மாறிவிட்டார். 

 

 

இதையும் படிங்க: புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா?... சேலையை இறக்கிவிட்டு கவர்ச்சியை எகிற விட்ட யாஷிகா...!

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்போது மீண்டும் ஆரம்பமாக உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் சிறுத்தை சிவாவின் அப்பா ஜெயக்குமார் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் காலமானார். டாக்குமெண்ட்ரி பட டைரக்டராக பணியாற்றி வந்த இவர், பல்வேறு சிறப்பான ஆவண படங்களை இயக்கியுள்ளார். சென்னையில் வசித்து வந்த ஜெயக்குமாருக்கு சிறுத்தை சிவா இரண்டாவது மகன், மூத்த மகள் கமலி சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். கடைசி மகன் பாலா ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார். 

 

இதையும் படிங்க: மனைவியை நம்பி மோசம் போன விஜய்... 15 வருஷத்துக்கு முன்னாடி சேர்த்த சொத்துக்கு ஆப்பு...!

என் அப்பா அரசாங்கம், மருத்துவம், விவசாயம் சார்ந்த நிறைய டாக்குமென்ட்ரி எடுத்திருக்கார். குறிப்பா, விவசாயம் சார்ந்த டாக்குமென்ட்ரில டாக்டரேட் வாங்கியிருக்கார்.அப்பாவுக்கு கமர்ஷியல் படங்கள் இயக்கணும்னு ஆசையிருந்தது. ஆனா, நேரமின்மை காரணமா அப்பாவால டைரக்‌ஷன் பண்ண முடியல. அப்பாவை இழந்தது தாங்க முடியாத துக்கத்தை கொடுத்துள்ளது என உருக்கமாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சிறுத்தை சிவா.