நடிகர் கார்த்தி நடித்த ’சிறுத்தை’ படத்தை இயக்கி சூப்பர் ஹிட்  வெற்றியை கொடுத்தவர் சிவா. எனவே இந்த படத்திற்கு பின் ரசிகர்கள் இவரை  சிறுத்தை சிவா என அன்போடு அழைத்தனர். அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான இவருக்கு இதுவரை எந்த இயக்குனருக்கும் கிடைத்திடாத பல அரிய வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

அஜித்தை வைத்து இவர் இயக்கிய வீரம் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், தொடர்ந்து அஜித்தை வைத்து... வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களை தொடர்ந்து இயக்கினார்.  தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்... நீண்ட நாட்களுக்கு பின், குஷ்பு மற்றும் மீனா, நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்கிற செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் திடீரென இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தையார் ஜெயக்குமார் இன்று சென்னையில் காலமாகியுள்ளார். வயது மூப்பு காரணமாக அவதி பட்டுவந்த இவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அவரது ஒட்டு மொத்த குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.