இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சில்லுக்கருப்பட்டி'.  இந்த படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்திருந்தார்.  இவருக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார்.

மேலும் நிவேதா சதீஷ், லீலா சாம்சன்,  சாரா அர்ஜுன்,  ஸ்ரீராம், உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.  இந்த திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று, ஹிட் பட லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.

சராசரி மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைக்கூட மிகவும் அழுத்தம் திருத்தமாக கூறி இருந்தார் இயக்குனர்.  இந்நிலையில் இந்த படத்தை மனதார பாராட்டி ட்விட் செய்துள்ளார் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்... சில்லுக்கருப்பட்டி அழகும், அர்த்தமும், இனிமையும்,  புதுமையுடன் உள்ள உணர்வுப்பூர்வமான திரைப்படம் என்றும்,  இப்படத்தை திறமையான பலர் சேர்ந்து உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். காயமடைந்த காகம்,  நிழல் முத்தம், அலெக்சா ஆகியவை மறக்க முடியாத கவிதை என குறிப்பிட்டுள்ளார்.  மேலும் சிறந்த பணியை மேற்கொண்ட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், என அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.  இந்த படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீம் பூவரசம் பீபீ என்கிற படத்தை இயக்கியிருந்தார் இந்த படத்தை டிவைன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம்