தமிழ் சினிமாவில், பல இயக்குனர்கள் வியர்த்து பார்க்கும் அளவிற்கு தன்னுடைய தரமான கதைகள் மூலம் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர். இதனாலேயே இவருக்கு பிரமாண்ட இயக்குனர் என்கிற பெயரும் உள்ளது. 

எப்படி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலாவது  நடிக்க வேண்டும் என பல ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் நினைக்கிறார்களோ... அதே போல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற கனவும் பல நடிகர்களுக்கு உண்டு. 

இன்னும் நான்கு நாட்களில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள 
 2 . ௦ படம் வெளியாக உள்ள நிலையில். அடுத்ததாக இந்தியன் இரண்டாம் பாகம் எடுப்பதில் பிஸியாக இறங்கி விட்டார் ஷங்கர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், இந்தியன் 2 படத்தை தொடர்ந்து. முதல்வன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்க்கு முக்கிய காரணம் முதல்வன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் தான். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் டிராப் ஆனது. இதை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் நடித்தார்.  

இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் முதல்வன்-2 எடுப்பீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்க்கு பதில் அளித்த ஷங்கர். ‘அதற்க்கு தகுந்த போல்  ஒரு கதை உருவாக வேண்டும், அந்த கதை யாரை தேடுகிறதோ அவருடன் பணியாற்றுவேன், அது விஜய் என்றால் ஓகே தான்’ என்று கூறியுள்ளார். ஏற்கனவே இந்தியன் பார்ட் 2 பற்றி கேள்வி எழுப்பிய போது இதே போன்ற பதிலை தான் ஷங்கர் தெரிவித்தார். எனவே ஷங்கரின் அடுத்த திரைப்படம் முதல்வன் 2 வாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே போல் இதில் விஜய் ஹீரோவாக நடிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.