director shankar warned anirudh for his music in next movie

கட் அண்ட் காப்பி இருக்க கூடாது...அனிருத்துக்கு ஸ்ட்ரிக்டா கண்டிஷன் போட்ட ஷங்கர்..!

தமிழ் சினிமாவில் உள்ள இசை அமைப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் இசை அமைப்பாளர் அனிருத்.

தற்போது வெளிவரும்புது படங்களில்அதிக அளவில் அனிருத் இசையையே கேட்க முடியும்.

இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்க உள்ள இந்தியன் 2 என்ற படத்திலும், ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கும் இசை அமைப்பாளர் அனிருத் தான் இசை அமைக்க உள்ளார்

சமீப காலமாக மார்கெட்டில் தனக்கென்ன நல்ல வரவேற்பை வைத்துள்ளார் அனிருத்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அனிருத்துக்கு சில கண்டிஷன் போட்டு உள்ளார் இயக்குனர் ஷங்கர்

வேலைக்காரன் படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார். இந்த மியூசிக் காப்பி அடிக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது.

இது போன்ற சர்ச்சை மீண்டும் ஒரு முறை வரக்கூடாது என்பதற்காகவும், வேறு எந்த ஒரு மியூசிக்கையும் சார்ந்து இருக்க கூடாது என்றும்....இசை ஒரிஜினலாக தான் இருக்க வேண்டும்..எந்த ஒரு ஹாலிவுட் படத்தில் இருந்தும் காப்பி அடிக்கக்கூடாது என கட் அண்ட் ரைட்டாக கூறி உள்ளார் இயக்குனர் ஷங்கர்.