’நடிகர் சூர்யா மத்திய மாநில அரசுகளின் கல்விக்கொள்கை குறித்து என்ன பேசினார் என்பது எனக்குத் தெரியாது. அவ்வாறு அவர் பேசியதாக எதையும் நான் படிக்கவில்லை’என்று பிரம்மாண்டமாய்ப் புளுகியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

சில திஅங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..?எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்’ எனக் கூறியிருந்தார்.

சூர்யாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுப் பொருளாக மாறியது. சூர்யாவின் இந்தப் பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கடுமையாக சாடியிருந்தனர். அதேபோல், சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவாக டிடிவி தினகரன், சீமான், கமல்ஹாசன், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிடட பலர் கருத்து தெரிவித்தனர்.தனக்கு எதிரான கருத்துக்கு பதில் அளித்த நடிகர் சூர்யா. சமமான வாய்ப்பும், தரமான கல்வியும் மறுக்கப்பட்ட மாணவர்களின் நிலையை உணர்ந்தே, புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து தாம் கருத்துக் கூறியதாக விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் ஷங்கர், நடிகர் சூர்யா பேசியது எனக்கு தெரியாது. நான் அதை படிக்கவில்லை’என்று சர்ச்சையிலிருந்து தப்புவதாக நினைத்து சாமர்த்தியமாக பதலளித்துள்ளார்.  அவரது இந்த பதிலால் கடுப்பான நெட்டிசன்கள் ‘விட்டா இவரு சூர்யாவே யாருன்னு தெரியாதுன்னு சொன்னாலும் சொல்லுவார்’ என்று விளாசிவருகிறார்கள்.