Director Shankar : மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை திடீரென நிறுத்திய இயக்குனர் ஷங்கர்... காரணம் என்ன?
Director Shankar : மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வருகிற மே 1-ந் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்த ஷங்கர். இதற்காக பத்திரிக்கை அடித்து திரைப்பிரபலங்களுக்கு கொடுத்து வந்தார்.
தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர், இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற மகள்களும், அர்ஜித் என்ற மகனும் உள்ளார். இதில் இளைய மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அவர் நடித்துள்ள முதல் படம் விருமன். முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதிதி.
2டி நிறுவனம் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வருகிற ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. பிரபல தொழிலதிபரின் மகனும் கிரிக்கெட் வீரருமான ரோகித் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா. அந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதையடுத்து மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வருகிற மே 1-ந் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்த ஷங்கர். இதற்காக பத்திரிக்கை அடித்து திரைப்பிரபலங்களுக்கு கொடுத்து வந்தார். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தற்போது திடீரென அந்த நிகழ்ச்சியை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பத்திரிக்கை வைத்தவர்களுக்கெல்லாம் இந்த தகவலை மெசேஜ் மூலம் இயக்குனர் ஷங்கர் அனுப்பி உள்ளாராம். இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
இதையும் படியுங்கள்... Kaathuvaakula Rendu Kaadhal Review : காத்துவாக்குல ரெண்டு காதல் சக்சஸ் ஆனதா? இல்லையா?- டுவிட்டர் விமர்சனம் இதோ