ராம் சரணை தொடர்ந்து, பாலிவுட் நடிகரை இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

ராம் சரணை தொடர்ந்து, பாலிவுட் நடிகரை இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குனர் ஷங்கர் நடிகர் கமலஹாசனை வைத்து இயக்கி வந்த 'இந்தியன் 2' திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'இந்தியன் 2 ' துவங்கியதில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து வந்த படப்பிடிப்பில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகினர். பின்னர் கொரோனா பிரச்சனை தலைதூக்கவே, முழுமையாக படப்பிடிப்பு கைவிடப்பட்டது.

தற்போது கமல்ஹாசன், சட்ட மன்ற தேர்தலில் பிஸியாகியுள்ளார். எனவே, அதனால் அதற்குள், தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவை வைத்து படம் இயக்க தயாராகி விட்டார். தில் ராஜு தயாரிக்கும் ராம் சரணின் 50-வது படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியானது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஏற்கனவே பாலிவுட் படங்களை இயக்க திட்டமிட்டிருந்த இயக்குனர் ஷங்கர், தற்போது நேரடியாக பாலிவுட் படம் ஒன்றையும் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக நடிகர் ரன்வீர் சிங்குடன் பேச்சுவார்த்தையும் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த படம் குறித்து ரன்வீர்சிங் சென்னை வந்து இயக்குனர் சங்கரை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 'அந்நியன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்ததை தொடர்ந்து, இந்த படத்தை.... ஹிந்தியில் ரீமேக் செய்ய ஷங்கர் திட்டமிட்டார் பின்னர் அது முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.