தமிழ் சினிமாவிற்கு அஜித் என்ற நாயகனை அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் செல்வா. இவருடைய அமராவதி படம் மூலமாக தான் 25 வருடங்களுக்கு முன்பு அஜித் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அப்படி துவங்கிய அஜித்தின் பயணம் தற்போது அனைவரும் வியக்கும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு தான் அஜித் 25 வருடங்கள் சினிமாவில் நிறைவு செய்ததை ரசிகர்கள் கொண்டாடினார்கள். 

அதன் பின்னர் இயக்குநர் செல்வாவும், ஆசையில் ஓர் கடிதம், கர்ணா, நான் அவனில்லை என 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக வலம் வந்த செல்வா தனது மகனுக்கு கொரொனா லாக்டவுன் காரணமாக சிம்பிளாக திருமணத்தை முடிந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், புதுமண ஜோடியின் சில புகைப்படங்கள் மட்டும் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

பெரிதாக திரைத்துறையினர் பங்கேற்காத இந்த திருமணத்தில் டி.இமான் மட்டும் கலந்து கொண்டு வாழ்த்து கூறியுள்ளார். தன்னை அறிமுகப்படுத்தி வைத்த இயக்குநர் என்பதால் அஜித் இந்த திருமணத்தில் பங்கேற்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பாத அஜித் இந்த முறையும் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்.