Director Sasikumar complained to police about financier anbuchelian
இணை தயாரிப்பாளர் அஷோக் குமார் தற்கொலை தொடர்பாக ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது இயக்குநர் சசிகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகரும், இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அஷோக் குமார். இவர் இணை தயாரிப்பாளராகவும், சசிகுமார் பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் இருந்தார்.
இந்த நிலையில் அவர் சென்னை வளசரவாக்கத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவரது தற்கொலை தொடர்பாக கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அதில், "பைனான்சியர் அன்புச் செழியன் மூலம் கந்துவட்டி கொடுமைக்கு ஆளானது" தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சசிகுமார் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கந்துவட்டி கொடுமையால் அனாதையான குடும்பங்களில் அஷோக் குமாரின் குடும்பமும் சேர்ந்தது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இனியாவது கந்துவட்டி கொடுமையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
