சுமார் எட்டு வருடத்தயாரிப்பில் இருந்து வரும் வெள்ளியன்று ரிலீஸாகவிருக்கும் ‘மகா முனி’பட ஷூட்டிங்கின்போது நடிகர் ஆர்யா நான்கு முறை அழுது அனைவரையும் வியப்பிலாழ்த்தினார் என்று விழா மேடையில் அவரை புகழ்ந்து பேசினார் நடிகை ரோகிணி.

ஞானவேல் ராஜாவின் கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் ஆர்யா, இந்துஜா, மஹிமா,ரோகிணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மகாமுனி’. இதற்கு முன் 2010ல் வெளிவந்த ‘மவுன குரு’படத்தை இயக்கிய சாந்தகுமாரின் இந்த இரண்டாவது படைப்பு வெளியாக 9 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.ஒரு வழியாக வரும் வெள்ளியன்று ரிலீஸாகவுள்ள அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா,’“2010-ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன். அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக் கண்டு நான்பெரிதும் வியந்தேன்.அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன். இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கான எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவருடன் வேலை செய்யவிருப்ப்ப்பட்டு இருவரும் இணைந்தோம்.

இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது. ஆனால், அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் முதலில் வேலை செய்யத் துவங்கியபோதுஅவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்தப் படத்தின் மொத்தக் குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார்.

அடுத்து பேசிய நடிகை ரோகிணி,’“என்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது மிகவும் மகிழ்ந்தேன். இந்தப் படத்திற்கு ஒரு போட்டோ ஷூட் நடத்தினார்கள். அந்த போட்டோ ஷூட்டிற்குஇரண்டுவிதமான லுக்குகளை மேற்கொண்டார்கள். ஒரு போட்டோ ஷூட்டுக்கே இத்தனை தூரம் மெனக்கெடுகிறார்களே என்று வியந்தேன்.நான் இந்தப் படத்தில்தான் முதல் முறையாக ஆர்யாவுடன் நடித்திருக்கிறேன். அவர் மிகவும் சிறப்பான நடிகர். ஒரு காட்சியை நான்குவிதமான வித்தியாசமான கோணத்தில்படமாக்கினார்கள். அந்தக் காட்சிகளில் நான்கு முறையும் ஆர்யா கண்ணீர்விட்டு அழுதார். அவருடைய இந்த அர்ப்பணிப்புத் தன்மையுடனான நடிப்பு என்னை மிகவும்கவர்ந்தது.இயக்குநர் சாந்தகுமார் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே அனைத்தையும் செய்தார். இப்படிப்பட்ட ஒரு இயக்குநரைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கிடைத்தது, அவருக்கு பெரும் பாக்கியம்தான்…” என்றார்.