‘இந்தக்காலத்துப் பெண்கள்  தங்கள் காதல் விஷயத்தில் மிகவும் துணிச்சல் மிக்கவர்களாக இருக்கிறார்கள். அதே சமயம் ஒரே நேரத்தில் நாலைந்து பேருக்கு ஐ லவ் யூ’ சொல்லிவிடுகிறார்கள்’ என்று தனது பட ஆடியோ வெளியீட்டில் கலாய்த்திருக்கிறார் பிரபல இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர்.

ஜெய் நடிப்பில் , எஸ் ஏ சந்திரசேகர் இயக்கும் கடைசி திரைப்படம் 'கேப்மாரி'. இந்த படத்தில் அதுல்யா மற்றும்  அறிமுக நடிகை வைபவி ஆகியோரும் கதாநாயகியாக நடிக்கின்றனர்.இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர், ’’40 நாட்கள் படபிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் 10 - 15 நாட்கள் மட்டுமே படபிடிப்பு உள்ளது.இன்று பல புது ஐடியாகளுடன் இளம் இயக்குனர்கள் திரைப்படம் இயக்குகின்றனர் . இந்த  முதிய வயதிலும் கூட  இளைஞர்களுக்காகவே நானும்  இந்த திரைப்படம் இயக்குகிறேன் . என் திரையுலக பயணத்தில் இதுவே கடைசி திரைப்படம்..

இது  IT தொழிலாளர்கள் , அவர்கள் வாழ்க்கை சூழல் பற்றிய கதை இந்த கேப்மாரி படம். இந்த திரைப்படம் முழுக்க ரொமான்டிக் காதல் கதையாக அமைந்துள்ளது.நம் நாட்டில் செக்ஸ் பற்றி பேசினால் தப்பு என்று கருதுகின்றனர். ஆனால் அது ஒரு அழகான விஷயம். இப்போதுள்ள பெண்கள் எல்லாம் காதலை துணிச்சலாக வெளிப்படையாக சொல்கிறார்கள். அதில் ஒரே ஒரு பிரச்சினைதான் அவர்கள் ஒரே நேரத்தில் நாலைந்து பேரிடம் காதலைச் சொல்லிவிடுகிறார்கள்’என்றார்.

தமிழகத்தின் வருங்கால முதல்வர் என்று கருதப்படும் விஜய்யின் தந்தை பெண்கள் குறித்து இவ்வளவு கொச்சையாகப் பேசலாமா என்ற டாபிக் இன்னும் வலைதளங்களில் அவ்வளவாக சூடு பிடிக்கவில்லை. நமது கடமையாகக் கொஞ்சம் எடுத்துக்கொடுத்திருக்கிறோம்.கம் ஆன் ஸ்டார்ட் மியுசிக்...