‘சர்கார்’ போன்ற அரசியல் படங்களை இயக்கும்போது தனிமனித தாக்குதல்களிலோ, அல்லது காழ்ப்புணர்ச்சியுடனோ எடுக்கக்கூடாது என்று இயக்குநர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் ஆர்.கே.செல்வமணி.
‘சர்கார்’ போன்ற அரசியல் படங்களை இயக்கும்போது தனிமனித தாக்குதல்களிலோ, அல்லது காழ்ப்புணர்ச்சியுடனோ எடுக்கக்கூடாது என்று இயக்குநர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் ஆர்.கே.செல்வமணி.
‘சர்கார்’ படம் குறித்த சர்ச்சைகள் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தபோது மவுனம் காத்த ஃபெப்சி தலைவர் செல்வமணியின் காலதாமதமான அறிக்கை திரைத்துறையைச் சார்ந்த பலருக்கும் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது.
துவக்கத்தில் சர்கார் கதை சர்ச்சை நடந்தபோது முழுக்க விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் பக்கம் நின்ற செல்வமணி, பிரச்சினை ‘சர்கார்’ கோஷ்டிகளுக்கு எதிராக திரும்ப ஆரம்பித்ததும் சைலண்டாகிவிட்டார். அடுத்து இன்று மதியம் அ.தி.மு.க. அரசுக்கும் சர்கார் குழுவினருக்கும் இடையில் சமரசம் ஏற்படும் வரை அவர் சீனுக்கே வரவில்லை. ஃபெப்சியின் தலைவராக மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர், அமைச்சர்கள் படத்தைக் கண்டபடி விமர்சிக்கையில், தியேட்டர்கள் சூறையாடப்படுகையில் அமைதியாக இருந்ததை இயக்குநர் சங்க உறுப்பினர்கள் உட்பட ஒருவரும் ரசிக்கவில்லை.
தற்போது வெளியிட்டிருக்கும் அறிக்கையிலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நம்முடன் சகோதரர்கள் போல பாசத்துடன் இருக்கிறார்கள். அதைக்கெடுத்துவிட வேண்டாம்’ என்று ஆளும்கட்சிக்கு சொம்பு அடிப்பதாகவே இருக்கிறது.
