சினிமாவுக்குள் அரசியலைக் கொண்டு வராதீர்கள் எனவும் நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படப்பிடிப்புத் தளத்தில் பாஜக போராட்டம் நடத்தி இருப்பது தேவையற்றது எனவும் இயக்குனர் ஆர் கே செல்வமணி காட்டமாக தெரிவித்துள்ளார்.  நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியதுடன் அவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர் .  இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. 

இந்த படப்பிடிப்பு தளத்தில் பிப்ரவரி 7 மாலை பாஜகவினர்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது அவர்களுக்கு எதிராக விஜய் ரசிகர்களும் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.  இந்நிலையில் அவர்களை கலைக்கும் வகையில்  போலீசார் லேசான தடியடி நடத்தினர் இச்சம்பவத்தால் படபிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் இது தொடர்பாக பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி பத்திரிக்கைகளை சந்தித்தார் ,  அதில் பேசிய அவர் மாஸ்டர் படப்பிடிப்புத் தளத்தில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தால் ,  பெப்ஸி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இந்த மாதிரியான போராட்டத்தால் திரைப்படத்துறையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது .  இதை பெப்ஸி  அமைப்பு  வன்மையாக கண்டிக்கிறது .   இதுபோன்ற போராட்டங்களால் தான் படப்பிடிப்புகள் தமிழகத்தை விட்டு வெளியே கொண்டுபோய் விடுகிறது, 

பெரிய கதாநாயகர்களில்  படங்களில் விஜய் படபிடிப்பு மட்டும்தான் தமிழகத்தில் நடக்கிறது ,  ரஜினி அஜித் போன்றவர்களின் படங்கள் வெளிமாநிலங்களுக்கு மாற்றிவிடுகிறது.   இதனால் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ஆயிரம் கோடி ரூபாய் பணம் வெளியே போய் விடுகிறது . நெய்வேலியில் நடைபெற்ற இந்த போராட்டம் முறையல்ல . நியாயமில்லை,   அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நீங்கள் செய்யும் சிறு விஷயங்கள் ,  தமிழ் சினிமாவை மோசமாக பாதிக்கிறது .  அரசியலை அரசியலோடு நிறுத்துங்கள் சினிமாவுக்கு அரசியலை கொண்டு வராதீர்கள் என்று ஆர். கே செல்வமணி பேசியுள்ளார் .