‘வல்லவன்’ பட சமயத்தில் சிம்புவும் நயன்தாராவும் எவ்வளவு தீவிரமாகக் காதலித்தார்கள் என்பதையும், திருமணத்தை நோக்கி நகர்ந்த அந்தக்காதல் திடீரென திசைமாறி கவிழ்ந்த கப்பல் ஆனதும் இந்த நாடே அறியும்.

ஆனால் அந்தக் காவியக் காதல்  கைகூடாமல் போனதற்கு கேவலம் ஒரு ஜோஸியர்தான் காரணம் என்று ஒரு இயக்குநர் தற்போது போட்டு உடைத்திருக்கிறார்.

சிம்புவை ‘கெட்டவன்’ என்ற ஒரு படத்தை இயக்குவதாக இருந்த ஜி.டி.நந்து என்ற நல்லவர்தான் அவர்.

நந்து என்ன சொல்கிறார் என கேளுங்கள்…

'கெட்டவன்’ படக்கதைக்கு முதலில் ஓ.கே.சொன்ன சிம்பு பின்னர் என்ன நினைத்தாரோ என்னை அலைக்கழிக்க ஆரம்பித்தார்.

பின்னர் அதே கதையை இயக்குநர் பூபதி பாண்டியன் மூலம் தனுஷிடம் சொல்லமுயற்சித்தேன். அவரிடம் சொல்வதற்கு முன்பே தகவலைத் தெரிந்துகொண்ட சிம்பு என்னக் கடுமையாகக் கோபித்துக்கொண்டார். பின்னர் அந்தக் கோபத்தால் ‘கெட்டவன்’ டிராப் ஆகிவிட்டது.

எனக்குத் தெரிந்தவரை நயன் தாராவும் சிம்புவும் பிரிந்ததற்கு திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் ஜோஸியர் ஒருவர்தான் காரணம். ஒருமுறை அவரை நானும், சிம்புவின் சார்பாக ஒருவரும் நயன், சிம்பு ஜாதகங்களுடன் சந்தித்தோம்.

இருவரது ஜாதகங்களையும் பார்த்த அவர், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டால் தெருவுக்கு வந்துவிடுவார்கள். அப்படி இந்த திருமணம் நடைபெறாமல் போனால் எதிர்காலத்தில் நயன் தாரா தமிழக முதல்வராவதற்கு கூட வாய்ப்புள்ளது.

இரண்டாவது தகவலைப்பற்றி கவலைப்படாமல் ‘தெருவுக்கு வந்துவிடுவார்கள்’ என்ற ஜோஸியரின் கூற்றை நம்பித்தான் சிம்பு தப்பி ஓடினார் என்கிறார் நந்து. நன்று.