தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் புதிய இயக்குனர்கள் அனைவரும் எளிதில் மக்கள் மனதில் பதிந்து விட முடியாது. ஆனால் இயக்குனர் பா.ரஞ்சித் 'அட்டகத்தி' மற்றும் 'மெட்ராஸ்' ஆகிய படங்களை மிகவும் குறைவான பட்ஜெட்டில் இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.

மூன்றாவது படமான 'கபாலியை' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கினார். பின் 'காலா' படத்தை இயக்கும் வாய்ப்பை ரஜினி பா.ரஞ்சித்துக்கு கொடுத்தார். இதனால் குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு படங்களை இயக்கிய ஒரே இயக்குனர் என்கிற பெருமையும் இவருக்கு உள்ளது. 

தற்போது படங்கள் இயக்குவது மட்டும் இன்றி, தயாரிப்பிலும் தன்னுடைய முழு கவனத்தை, செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் பெண்கள் தினத்தை முன்னிட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, இவர் பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, 'தமிழ்சினிமாவில் கதாநாயகிகளை,  போகப்பொருளாகவும் சந்தையாகவும்தான் பார்க்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும் என்று கூறினார்.

மேலும் ஒரு திரைப்படத்திற்கு நடிகைகளை தேர்வு செய்யும் போது, அவர்  நல்ல நடிகையா, சிறப்பாக நடிப்பாரா என அவருடைய திறமையை பார்த்து தேர்வு செய்யாமல், உடல் அமைப்பு மற்றும் அழகு இருக்கிறதா? என பார்த்து தேர்வு செய்கின்றனர் என கூறினார். 

இவரின் இந்த கருத்துக்கு தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகைகளின் அழகை பார்க்காமல் திறமையை பார்ப்பதாக குறை சொல்லும் இவர்,  ஏன் 'மெட்ராஸ்' படத்தில் நாயகி கேத்தரின் தெரசா. 'கபாலி' படத்தின் நாயகி  ராதிகா ஆப்தே என வெளிமாநில அழகிகளை தேர்வு செய்கிறார். தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது இவராகவே வாண்டடாக வாயை விட்டு சிக்கி கொண்டது போல் அமைத்துள்ளது.