Asianet News TamilAsianet News Tamil

கைது செய்யப்படுவாரா இயக்குநர் பா.ரஞ்சித்... நீதிமன்றம் 2 நாள் கெடு..!

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்ஜாமீன் கேட்டு பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை வரும் வெள்ளிக்கிழமைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது. பா.ரஞ்சித்தை 21-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Director ranjith arrest... 2 days deadline
Author
Tamil Nadu, First Published Jun 19, 2019, 3:45 PM IST

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்ஜாமீன் கேட்டு பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை வரும் வெள்ளிக்கிழமைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது. பா.ரஞ்சித்தை 21-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 Director ranjith arrest... 2 days deadline

தஞ்சாவூரில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய அவர், ‘ராஜராஜ சோழன் காலத்தில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன. ராஜராஜ சோழனின் காலம்தான் இருண்ட காலம்’ என்று பேசினார். அவருடைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. Director ranjith arrest... 2 days deadline

இந்நிலையில், ராஜராஜ சோழன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பா.ரஞ்சித் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, இயக்குநர் பா. ரஞ்சித் முன் ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.Director ranjith arrest... 2 days deadline

இந்த முன் ஜாமீன் மீதான விசாரணை நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய பின்னர் ஜூன் 19-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இயக்குநர் ப.ரஞ்சித்தை நாளை மறுநாள் வரை கைது செய்ய தடை விதித்து நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios