director ranjith announced kaala movie release date

இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்திற்கு எப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறதோ... அதே போல் இதுவரை நடிக்காத மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் காலா படத்தைப் பார்க்கவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

தற்போது காலா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், காலா திரைப்படம் 2018 ஏப்ரல் மாதத்தில் வெளிவர அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார்.

மேலும் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கி, விரைவில் வெளியாகத் தயாராக இருக்கும் 2.0 ரிலீஸ்க்கு பின் காலா படத்தின் வெளியீடு குறித்து அதிகார பூர்வமாக தெரிவிக்கப்படும் எனக் கூறினார். 

இதைத்தொடர்ந்து பேசிய ரஞ்சித் 'மெர்சல்' திரைப்படத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் GST பற்றிய வசனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் அதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்