கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'கமர்கட்டு' படத்தின் மூலம் இயக்குனராக அரிமுகமானவர் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன். தற்போது இவர் 'இதயம் திரையரங்கம்' என்கிற படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டிருந்தார்.

இந்த படத்தை எடுப்பதற்காக,  அசோக் என்கிற பைனான்சியரிடம் ரூபாய் 40 லட்சம் கடன் பெற்றார். மேலும் இவருடன், இந்த படத்தை 'நர்தகி'  படத்தை இயக்கிய விஜய பத்மா, மற்றும் அவரது கணவர் முத்து கிருஷ்ணன் ஆகியோரும் தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் சொன்ன தேதியில் படத்தை எடுத்து முடிக்க வில்லை. மேலும் பைனான்சியரிடம் வாங்கிய  40 லட்சம் பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இதைத்தொடர்ந்து பணம் வாங்கிய இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன், விஜயபத்மா, மற்றும் அவரது கணவர் முத்து கிருஷ்ணன் ஆகியோரிடம் பலமுறை பணம் கேட்டும் அதனை அவர்கள் திருப்பி கொடுக்காததால். அசோக்குமார் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் தேடிவருவதை அறிந்து இவர்கள் மூவரும் தலைமறைவாகினர். தற்போது இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன் உள்பட மூவரையும், கடந்த 27-ந்தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து  புழல் சிறையில் அடைத்துள்ளனர்.