கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு தற்போது கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற்று வந்தது. தாய்லாந்தில் பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதில்  விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ரகுமான், கிஷோர், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வந்தனர். 

இதையும் படிங்க: பிரபல நடிகரின் காதலுக்கு ‘நோ’ சொன்ன கீர்த்தி சுரேஷ்... அந்த நடிகரை காதலிக்கிறாராம்?

சுமார் 400 கோடி பட்ஜெட்டில் லைகாவும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இந்த படத்தை பிரம்மாண்ட தயாரித்து வருகின்றன. இந்நிலையில் மணிரத்னத்தின் காற்றி வெளியிடை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி ராவ். இவர் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் முட்டி போட்டு, கையில் ரோஜாவுடன் மணிரத்னத்திற்கு புரோபோஸ் செய்வது போன்ற போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#ManiSir... The reason I believe dreams come true. #3YearsOfKaatruVeliyidai #Believe #Magic #NeverGrowUp

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari) on Apr 6, 2020 at 11:57pm PDT

அத்துடன் மணி சார், என் கனவுகள் நனவாகும் என்று நான் நம்ப காரணமானவர் என்று பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா, எப்பவும் சீரியஸாக இருக்கும் மணிரத்னம் முதல் முறையாக வெட்கப்பட்டு இப்போது தான் பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: இந்தியாவுக்கு நன்றிக்கடன் செலுத்திய சீனா... 1.70 லட்சம் கொரோனா பாதுகாப்பு உடைகள் இலவசம்...!

அந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதிலும் எப்போதும் சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிடுவதன் மூலம் சர்ச்சையில் சிக்கி கொள்ளும் ராம்கோபால் வர்மா இந்த போட்டோவை பகிர்ந்துள்ளது தான் சிக்கலே. உண்மையாகவே மணிரத்னம் வெட்கப்பட்டதை காட்ட அந்த புகைப்படத்தை பதிவிட்டாரா?, இல்லை அவர் அதிதிராவ் கன்னத்தை கிள்ளுவதை காட்ட பதிவிட்டாரா? என்று நெட்டிசன்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.