நடிகை ஸ்ரீ தேவியின் மிக பெரிய ரசிகர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் நடிகை ஸ்ரீ தேவியை வைத்து திரைப்படமும் இயக்கியுள்ளார்.

பாகுபலி திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணாவுக்கு பதில், ஸ்ரீ தேவி நடித்திருந்தால் திரைப்படம் இன்னும் பிரமாதமாக வந்திருக்கும் என சர்ச்சை ட்விட் போட்டு, ஸ்ரீ தேவிக்கு சப்போர்ட் செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை யாராலும் நம்பமுடியாத நிகழ்வாக இருக்கும் நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா ஸ்ரீதேவியுடனான தனது திரைப்பயணம் பயணம் குறித்து டுவிட் செய்து வருகிறார்.

கடவுள் பெருமாள் முன் ஸ்ரீதேவி மற்றும் ராம் கோபால் வர்மா நிற்பது போல ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்து, பாலாஜி அவரை மட்டும் ஏன் கொண்டு போனாய் என்னை இங்கே விட்டுவிட்டு என பதிவு செய்துள்ளார்.