சர்ச்சைகளுக்கு பெயர் போன இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் இயக்கும் ஒவ்வொரு படங்களும் ஏதாவது சர்ச்சையை கிளப்பாமல் இருக்காது. சமீபத்தில் தெலுங்கில் வெளியான அம்மா ராஜ்யம் லோ கடப்பா பிட்டலு படம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியது. 

ராம் கோபால் வர்மாவின் ரங்கீலா படத்தை தழுவி, தெலுங்கில் பியூட்டி புல் என்ற படம் தயாராகியுள்ளது. அகஸ்தியா மஞ்சு இயக்கிய அந்த படத்தில் பார்த் சூரி, நைனா கங்குலி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் லிப்லாக், கிளாமர் குத்தாட்டம் என ஓவர் கவர்ச்சியுடன் வெளியான பியூட்டி புல் படத்தின் டிரெய்லர் சோசியல் மீடியாவில் வைரலானது. 

இந்நிலையில் அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ராம் கோபால் வர்மா மேடையில் ஹாட் ஹீரோயின் நைனா கங்குலியுடன் ஆட்டம் போட்டார்.

இதில் ஹைலைட் என்னவென்றால் ஹீரோயின் உடன் ஆடிக்கொண்டிருந்த ஹீரோவை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்ட ராம் கோபால் வர்மா. அனைவரும் பார்க்க ஹீரோயினை கட்டிப்பிடித்து ஆட ஆரம்பித்துவிட்டார். விழா மேடையில் ஹீரோயின் உடன் ராம் கோபால் வர்மா போட்ட ஆட்டம் தற்போதுசோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.