director rajith wishes keerthisuresh

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராக எந்திரன், அந்நியன், சிவாஜி ஆகிய படங்களில் பணிபுரிந்த ஆடம் தாசனுக்கு பாம்புசட்டை முதல் இயக்குனர் என்கிற அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.

சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடயே வரவேற்பையும் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறது. எளிய மக்களின் கதை, விளிம்புநிலை மக்களின் கதை, யதார்த்தமான கதை, வசனங்கள் அபாரம் என கொண்டாடப்பட்டாலும் தாமதமான வெளியீடு, பிரச்சினை என ஒரு போராட்டத்திற்கு பின்பே வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாம்பு சட்டை படத்தை பார்த்த அனைவரும் கீர்த்தி சுரேஷையும் அவரது கதாபாத்திரத்தையும் புகழ்ந்து வருகின்றனர். இது வரை அவர் நடித்ததிலேயே மிகவும் அருமையாக நடித்துள்ளார் என்றும், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்று புகழ்ந்து வருகின்றனர்.

அதே போல இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளையும் பல பிரபலங்கள் தொடர்ந்து புகழ்ந்து வரும் நிலையில்... இந்த படம் குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கபாலி படத்தை இயக்கிய
ரஞ்சித் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

தற்போது முன்னணி நடிகர்களில் படங்களில் மட்டுமே நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக தயாராவுள்ள படத்தில் நடிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.